முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கோலினமை

சோழர்   காலத்தில்   அறுவை   மருத்துவர்கள்  -  நாவிதர்கள் : சோழர்   காலத்தில்   நாவிதர்கள்   மிகவும்   உன்னத   நிலையில்   சிறப்புற்றிருந்தது   கல்வெட்டுக்கள்   மூலம்   அறிய   முடிகின்றது .    இராஜராஜனின்   கி . பி . 1014- ஆம்   ஆண்டைய   கல்வெட்டொன்றில்   பஞ்சவன்   மங்கலப்   பேரரையன்   அனையன்   பவருத்திரன்   மற்றும்   இராஜராஜ   பிரயோகத்தரையன்   என்னும்   பெயர்   கொண்ட   அறுவை   சிகிச்சை   செய்தவர்   களைப்   பற்றிக்   குறிப்பிடப்பட்டுள்ளது .    பிரயோகம்   என்ற   சொல்   மருத்துவ   சிகிச்சையைக்   குறிப்பிடும்   சொல்லாகும் .    எனவே   பிரயோகத்தரையன்   என்ற   சொல்   மருத்துவ   சிகிச்சை   செய்பவனைக்   குறிப்பிடு   வதாகும் .  அனையன்   பவருத்திரன்   என்பவர்   கோலினமை  ( கோலினமை  -  கோலி  -  மயிர் )  என்ற   தொழிலில்   வல்லவன்   என்ற   குறிப்பு   வருகின்றது .    இப்பெயருக்கு   அருகில்   இராஜராஜ   பிரயோகத்   தரையன்   என்ற   சொல்   மருத்துவரைக்   குறிக்கும் .    அம்பட்டன்   என்ற   சொல்லும்   மருத்துவரைக்   குறிக்கும் .    எனவே   கோலினமை   என்ற   சொல்லும்   மருத்துவத்துடன்   தொடர்புடையதாகவே   இருக்கு
சமீபத்திய இடுகைகள்

மேகமலை

செல்ல வேண்டிய சுற்றுலாத்தலம் - மேகமலை ஓர் இரவு தங்கி இரண்டு நாட்களில் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு குறைந்த செலவில் சுற்றுலா செய்ய நினைப்பவர்கள் தாராளமாக மேகமலைக்கு சென்று வரலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது திட்டமிடுதல் தான். மூன்று மாதங்களுக்கு முன்பே எந்த தேதியில் சென்று எந்த தேதியில் திரும்ப வேண்டும் என்பதை முடிவு செய்துகொண்டு அதற்கேற்றார் போல் ட்ரெயினில் புக் செய்தீர்கள் என்றால் செலவு குறைவாக இருக்கும். சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள். காரிலேயே சென்று வர திட்டமிட்டால் பயணம் இன்னும் சிறப்பாக இருக்கும். ட்ரெயினில் செல்வதாக இருந்தால் இரண்டு இடங்களை இறங்குவதற்கு தேர்வு செய்யலாம். சென்னை டூ திண்டுக்கல் வரை புக் செய்யலாம் அல்லது சென்னை டூ மதுரை வரை புக் செய்யலாம். சென்னையில் இருந்து செல்பவர்கள் இரவில் ட்ரெயின் (நாங்கள் பாண்டியன் எக்ஸ்பிரஸில் சென்றோம்) ஏறினால் காலை 5 அல்லது 6 மணிக்குள் மதுரைக்கு சென்றுவிடலாம். திண்டுக்கலில் இறங்குவதென்றால் 5 மணிக்கு முன்னதாகவே இறங்கிவிடுவீர்கள். திண்டுக்கலில் இருந்து மேகமலைக்கு எப்படி செல்வது? திண்டுக்கல் மற்றும் மது

முன்னோர்கள்

சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கர், திருவள்ளுவர், பாரதியார், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், கப்பலோட்டிய தமிழன் வ.வு.சிதம்பரனார், இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், ரவீந்திரநாத்தாகூர், டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், சுவாமி விவேகானந்தர், அன்னை தெரசா, பகத்சிங், லோகமான்ய பாலகங்காதர திலகர், கௌதம புத்தர், மகாத்மா காந்திஜி இவர்கள் அனைவரையும் பேருந்துநிலைய சுவர்களில் அழகாக வரைந்து வைத்திருக்கிறார்கள். அங்கும் சில அதிமேதாவிகள்! காதணி விழா, திருமண விழா போன்ற போஸ்டர்களை கிடைக்கிற கேப்பில் ஒட்டி வைத்திருக்கிறார்கள் (?). பே.நி..ன் மற்றொரு புறமோ நிற்க முடியாத அளவிற்கு முன்பெல்லாம் நாற்றமடித்தது. இப்போது சுத்தமாக இருக்கிறது. இதற்கும் ஓவியங்கள் தான் காரணம். சுவர் முழுவதும் கடவுள்கள். மூலையில் டாய்லெட் வசதி இருக்கிறது. இதற்காகத்தான் நம் முன்னோர்கள் கடவுள் பெயரை சொல்லியே அறிவியலை நுழைந்தார்களோ?. மூடநம்பிக்கைகள் என்று கூறப்பட்ட பல விஷயங்கள் விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டியவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

பெருவுடையார்

ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு திருச்சிக்கு போய்விட்டு திரும்ப வருகையில், தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்று வரலாம் என தோன்றியது. மனம் மிகவும் துவண்டுபோயிருந்தது. திருச்சிக்கு போன காரியம் முடியவில்லையே என்ற வருத்தம். கோவிலுக்கு சென்று வந்தால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணம். தஞ்சை பெரியகோவில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. ரொம்ப பிரசித்தமான கோவில். இவற்றை தாண்டி வேறெதுவும் தெரியாது (அதற்காக பின்னாளில் நான் வருத்தமடைந்தேன்). உள்ளே சென்றதும் கோவிலின் பிரம்மாண்டம் வியக்க வைத்தது. மூலவர் சந்நிதிக்கு சென்று பார்த்தபோது தான் பெருவுடையார் கோவில் என்று சொல்வது எவ்வளவு பொருத்தமானது என தோன்றியது. மிகமிக பெரிய சிவலிங்கத்தை பார்த்ததும் "சிவ சிவா, நமசிவாயா, எம்பெருமானே" என என்னென்னவோ பெயர்களை மனம் சொன்னது. மனம் ஒன்றி பிரார்த்தித்தேன். "இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உன் கழல் தொழுதெழுவேன். கடலினில் கலந்த அமுதொடு நஞ்சை மிடரினில் அடக்கிய வேதியனே" "நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே" உள்ளுக்குள் இழுபறியாய் இருக்கும் காரியம் முடியவேண