செல்ல வேண்டிய சுற்றுலாத்தலம் - மேகமலை ஓர் இரவு தங்கி இரண்டு நாட்களில் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு குறைந்த செலவில் சுற்றுலா செய்ய நினைப்பவர்கள் தாராளமாக மேகமலைக்கு சென்று வரலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது திட்டமிடுதல் தான். மூன்று மாதங்களுக்கு முன்பே எந்த தேதியில் சென்று எந்த தேதியில் திரும்ப வேண்டும் என்பதை முடிவு செய்துகொண்டு அதற்கேற்றார் போல் ட்ரெயினில் புக் செய்தீர்கள் என்றால் செலவு குறைவாக இருக்கும். சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள். காரிலேயே சென்று வர திட்டமிட்டால் பயணம் இன்னும் சிறப்பாக இருக்கும். ட்ரெயினில் செல்வதாக இருந்தால் இரண்டு இடங்களை இறங்குவதற்கு தேர்வு செய்யலாம். சென்னை டூ திண்டுக்கல் வரை புக் செய்யலாம் அல்லது சென்னை டூ மதுரை வரை புக் செய்யலாம். சென்னையில் இருந்து செல்பவர்கள் இரவில் ட்ரெயின் (நாங்கள் பாண்டியன் எக்ஸ்பிரஸில் சென்றோம்) ஏறினால் காலை 5 அல்லது 6 மணிக்குள் மதுரைக்கு சென்றுவிடலாம். திண்டுக்கலில் இறங்குவதென்றால் 5 மணிக்கு முன்னதாகவே இறங்கிவிடுவீர்கள். திண்டுக்கலில் இருந்து மேகமலைக்கு எப்படி செல்வது? திண்டுக்கல் மற்றும் மது...