முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முன்னோர்கள்

சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கர், திருவள்ளுவர், பாரதியார், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், கப்பலோட்டிய தமிழன் வ.வு.சிதம்பரனார், இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், ரவீந்திரநாத்தாகூர், டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், சுவாமி விவேகானந்தர், அன்னை தெரசா, பகத்சிங், லோகமான்ய பாலகங்காதர திலகர், கௌதம புத்தர், மகாத்மா காந்திஜி இவர்கள் அனைவரையும் பேருந்துநிலைய சுவர்களில் அழகாக வரைந்து வைத்திருக்கிறார்கள். அங்கும் சில அதிமேதாவிகள்! காதணி விழா, திருமண விழா போன்ற போஸ்டர்களை கிடைக்கிற கேப்பில் ஒட்டி வைத்திருக்கிறார்கள் (?). பே.நி..ன் மற்றொரு புறமோ நிற்க முடியாத அளவிற்கு முன்பெல்லாம் நாற்றமடித்தது. இப்போது சுத்தமாக இருக்கிறது. இதற்கும் ஓவியங்கள் தான் காரணம். சுவர் முழுவதும் கடவுள்கள். மூலையில் டாய்லெட் வசதி இருக்கிறது. இதற்காகத்தான் நம் முன்னோர்கள் கடவுள் பெயரை சொல்லியே அறிவியலை நுழைந்தார்களோ?. மூடநம்பிக்கைகள் என்று கூறப்பட்ட பல விஷயங்கள் விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டியவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

பெருவுடையார்

ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு திருச்சிக்கு போய்விட்டு திரும்ப வருகையில், தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்று வரலாம் என தோன்றியது. மனம் மிகவும் துவண்டுபோயிருந்தது. திருச்சிக்கு போன காரியம் முடியவில்லையே என்ற வருத்தம். கோவிலுக்கு சென்று வந்தால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணம். தஞ்சை பெரியகோவில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. ரொம்ப பிரசித்தமான கோவில். இவற்றை தாண்டி வேறெதுவும் தெரியாது (அதற்காக பின்னாளில் நான் வருத்தமடைந்தேன்). உள்ளே சென்றதும் கோவிலின் பிரம்மாண்டம் வியக்க வைத்தது. மூலவர் சந்நிதிக்கு சென்று பார்த்தபோது தான் பெருவுடையார் கோவில் என்று சொல்வது எவ்வளவு பொருத்தமானது என தோன்றியது. மிகமிக பெரிய சிவலிங்கத்தை பார்த்ததும் "சிவ சிவா, நமசிவாயா, எம்பெருமானே" என என்னென்னவோ பெயர்களை மனம் சொன்னது. மனம் ஒன்றி பிரார்த்தித்தேன். "இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உன் கழல் தொழுதெழுவேன். கடலினில் கலந்த அமுதொடு நஞ்சை மிடரினில் அடக்கிய வேதியனே" "நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே" உள்ளுக்குள் இழுபறியாய் இருக்கும் காரியம் முடியவேண...