சோழர் காலத்தில் அறுவை மருத்துவர்கள் - நாவிதர்கள் : சோழர் காலத்தில் நாவிதர்கள் மிகவும் உன்னத நிலையில் சிறப்புற்றிருந்தது கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகின்றது . இராஜராஜனின் கி . பி . 1014- ஆம் ஆண்டைய கல்வெட்டொன்றில் பஞ்சவன் மங்கலப் பேரரையன் அனையன் பவருத்திரன் மற்றும் இராஜராஜ பிரயோகத்தரையன் என்னும் பெயர் கொண்ட அறுவை சிகிச்சை செய்தவர் களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது . பிரயோகம் என்ற சொல் மருத்துவ சிகிச்சையைக் குறிப்பிடும் சொல்லாகும் . எனவே பிரயோகத்தரையன் என்ற சொல் மருத்துவ சிகிச்சை செய்பவனைக் குறிப்பிடு வதாகும் . அனையன் பவருத்திரன் என்பவர் கோலினமை ( கோலினமை - கோலி ...