முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேகமலை

செல்ல வேண்டிய சுற்றுலாத்தலம் - மேகமலை

ஓர் இரவு தங்கி இரண்டு நாட்களில் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு குறைந்த செலவில் சுற்றுலா செய்ய நினைப்பவர்கள் தாராளமாக மேகமலைக்கு சென்று வரலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது திட்டமிடுதல் தான். மூன்று மாதங்களுக்கு முன்பே எந்த தேதியில் சென்று எந்த தேதியில் திரும்ப வேண்டும் என்பதை முடிவு செய்துகொண்டு அதற்கேற்றார் போல் ட்ரெயினில் புக் செய்தீர்கள் என்றால் செலவு குறைவாக இருக்கும். சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள். காரிலேயே சென்று வர திட்டமிட்டால் பயணம் இன்னும் சிறப்பாக இருக்கும். ட்ரெயினில் செல்வதாக இருந்தால் இரண்டு இடங்களை இறங்குவதற்கு தேர்வு செய்யலாம். சென்னை டூ திண்டுக்கல் வரை புக் செய்யலாம் அல்லது சென்னை டூ மதுரை வரை புக் செய்யலாம்.

சென்னையில் இருந்து செல்பவர்கள் இரவில் ட்ரெயின் (நாங்கள் பாண்டியன் எக்ஸ்பிரஸில் சென்றோம்) ஏறினால் காலை 5 அல்லது 6 மணிக்குள் மதுரைக்கு சென்றுவிடலாம். திண்டுக்கலில் இறங்குவதென்றால் 5 மணிக்கு முன்னதாகவே இறங்கிவிடுவீர்கள்.

திண்டுக்கலில் இருந்து மேகமலைக்கு எப்படி செல்வது?


திண்டுக்கல் மற்றும் மதுரையில் இருந்து மேகமலைக்கு செல்ல கிட்டத்தட்ட ஒரே நேரம் தான் ஆகும். முதலில் திண்டுக்கல் வழியாக சென்றால் எப்படி செல்வது என்று பார்க்கலாம்.

திண்டுக்கல் டூ தேனி, தேனி டூ சின்னமனூர், சின்னமனூர் டூ மேகமலை இவையாவும் பஸ் ரூட்டுகள். இதில் சின்னமனூர் டூ மேகமலைக்கு மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பேருந்து வசதி இருக்கிறது. முதல் பேருந்து காலை 8.30 மணிக்கு சின்னமனூரில் இருந்து புறப்படும். டாக்ஸி புக் செய்து போகலாமா என்று கேட்பவர்கள் தாராளமாக திண்டுக்கலில் இருந்து நேராக மேகமலைக்கு புக் செய்து கொள்ளலாம். மேகமலையை சென்றடைய மூன்று மணிநேரமாகும். 10 பேர் செல்லும் அளவிற்கு வேன் புக் செய்தால் 5000 ரூபாய் ஆகும். இது மேகமலை வரை ட்ராப் செய்வதற்கு மட்டும். அங்கேயே தங்கி மறுநாள் திரும்ப அழைத்து வரவேண்டும் என்றால் அதற்கு கட்டணம் இன்னும் அதிகமாகும்.

மதுரையிலிருந்து செல்லும் வழி
 
மதுரையில் இறங்கினாலும் அதே ரூட்டுதான் (மதுரை-தேனி-சின்னமனூர்-மேகமலை). மேகமலைக்கு சென்று ரூம் புக் செய்து கொள்ளலாம் அல்லது தேனியில் ரூம் புக் செய்து தங்கிக்கொண்டு அங்கிருந்து கார் புக் செய்து மேகமலைக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு வரலாம். மேகமலையை
சுற்றி பார்க்க ஒருநாள் போதுமானது.

மேகமலை - பார்க்க வேண்டிய இடங்கள்
• வியூ பாய்ண்ட்
• ஹைவேவிஸ் டேம்
• மணலாறு பாலம்
• மணலாறு
• டீ எஸ்டேட்
• டீ ஃபேக்டரி
லோக்கலில் ஜீப்பில் சுற்றி காண்பிக்க கைடுகள் இருக்கிறார்கள்.
மேகங்கள் மலைகளில் தவழ்ந்து செல்லும் அழகை ரசிக்கலாம். மிதமான குளிர் நாள் முழுவதும் இருப்பதை அனுபவிக்கலாம். இரவில் சற்று கூடுதலாகவே குளிர் இருக்கும். மலைப்பகுதிகளில் உங்களுக்கு வாய்ப்பிருந்தால் யானை, மயில் போன்ற வனவிலங்குகளை கண்டு வியக்கலாம். விதவிதமான பறவைகளும், குரங்குகளும் நிறையவே பார்க்க முடியும்.

(வியூ பாயிண்ட்)
 (ஹைவேவிஸ் டேம்)
மேகங்கள் தவழும் மலைகள்
 (வியூ பாய்ண்ட் ல் நண்பர்களுடன்)

இவற்றையெல்லாம் பார்த்து ரசித்து அனுபவிப்பதறகு ஒருநாள் போதுமானது. ஓர் இரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் காலை கிளம்பி நீங்கள் மதுரையோ திண்டுக்கல்லோ செல்லலாம். அப்படி போகும் வழியில் சில அருவிகளும் ஆறுகளும் இருக்கின்றன. அவற்றையும் பார்த்துவிட்டு முடிந்தால் குளித்துவிட்டு கூட செல்லலாம். மிக நல்ல அனுபவமாக இருக்கும்.

வழியில் பார்க்க வேண்டிய இடங்கள்:
1.வீரபாண்டி ஆறு
2.கும்பக்கரை அருவி
3.சுருளி அருவி

 (வீரபாண்டி ஆறு)

நாங்கள் வீரபாண்டியில் இருந்து கிளம்பி மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு மதுரையில் இருந்து சென்னைக்கு கிளம்பிவிட்டோம். அதனால் மற்ற அருவிகளை பார்க்க முடியவில்லை. அதனையும் பாரக்க வேண்டும் என நினைப்பவர்கள் அதற்க்கேற்றார்போல் திட்டமிட்டுவிட்டு செல்வது நல்லது. மேகமலையும் அதனை சுற்றியுள்ள இயற்கை சாரந்த அழகான சூழ்நிலையும் மனதிற்கும் உடம்பிற்கும் இதமான அனுபவத்தை நிச்சயம் தரும்.

மேகமலையில் தங்குவதற்கு ராஜா அந்துவான் (Raja Anthuvan home stay) தங்கும் விடுதி என் அனுபவத்தில் நன்றாக இருக்கிறது. மூன்று வேளை உணவு, டீ, காபி மற்றும் ஓர் இரவு தங்குவதற்கு ஒரு ஆளுக்கு 1200 ரூபாய் வாங்குகிறார்கள். மூன்று வேளை சுவையான உணவு நிச்சயம்.
தொடர்புக்கு- Rajeshwaran Megamalai
Mobile 9150019988.
இவர் மூலம் சற்குணம் என்பவரை தொடர்புகொண்டு அங்கே சுற்றிக்காண்பிக்க கைடு மற்றும் உங்களுக்கு மதுரை அல்லது திண்டுக்கலில் இருந்து வேனோ டாக்ஸியோ வேண்டுமென்றால் அவரிடமே விசாரித்து அரேஞ்ச் செய்து கொள்ளலாம். 


அன்புடன்
ம.இராஜ்குமார்

கருத்துகள்

கருத்துரையிடுக